\
#Topnews முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் பரஸ்பரம் குற்றச்சாட்டு முதல் கோயம்பேடு சந்தை வரை..

#Topnews முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் பரஸ்பரம் குற்றச்சாட்டு முதல் கோயம்பேடு சந்தை வரை..

#Topnews முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் பரஸ்பரம் குற்றச்சாட்டு முதல் கோயம்பேடு சந்தை வரை..
Published on

நீட் தேர்வு காரணமாக 13 மாணவர்கள் தற்கொலைக்கு திமுகவே காரணம் என முதல்வர் பழனிசாமி பாய்ச்சல். முதல்வரே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலுக்கு ஆவேசம்.

மதுரை, சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை. வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

வீட்டிலிருந்தவாறே இறுதி செமஸ்டர் தேர்வை எழுத சென்னைப் பல்கலைக்கழகம் அனுமதி.
விடைத்தாளை தபால் மூலம் அனுப்ப மாணவர்களுக்கு அறிவுரை.

சிவகங்கையில் பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை.
ஆன்லைனில் நடத்தப்பட்ட வகுப்புகள் புரியாததால் விபரீத முடிவு எனத் தகவல்.

திருச்சியில் பிரபல நகைக்கடைகளில் சுங்கத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு.
கேரள தங்கக் கடத்தலில் கைதாகி உள்ள ஸ்வப்னாவுடன் தொடர்பா என விசாரணை

இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்தால் தக்க பதிலடியை சந்திக்க நேரிடும்.
சீனாவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை.

மீண்டும் திறக்க தயாராகும் கோயம்பேடு சந்தை.
இறுதிகட்ட தயாரிப்புகள் தீவிரம்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com