#TopNews | கொரோனாவால் முடங்கும் உலக நாடுகள்.. இன்று உரையாற்றும் பிரதமர் மோடி..!

#TopNews | கொரோனாவால் முடங்கும் உலக நாடுகள்.. இன்று உரையாற்றும் பிரதமர் மோடி..!

#TopNews | கொரோனாவால் முடங்கும் உலக நாடுகள்.. இன்று உரையாற்றும் பிரதமர் மோடி..!
Published on

டெல்லியில் இருந்து சென்னை வந்த வடமாநில இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 151 ஆக உயர்வு. மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் மும்முரம்.

கொரோனா தொடர்பாக நாட்டு மக்களுக்கு இன்றிரவு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்வது பற்றிய ஆலோசனைகள் வழங்குவார் என எதிர்பார்ப்பு.

சென்னையில் பால், மளிகை, காய்கறி கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கவில்லை என மாநகராட்சி விளக்கம். கடைகள் மூடப்படும் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை.

இத்தாலியில் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் 475 பேர் உயிரிழப்பு. பிரிட்டனிலும் பலி அதிகரிப்பதால், பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை.

உலக அளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்குகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்தைத் தாண்டியது.

கொரோனா எதிரொலியாக, அமெரிக்க குடிமக்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க அதிபர் ட்ரம்ப் முடிவு. திட்ட அறிக்கை தயாரித்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு.

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய எதிரி. உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் வேதனை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com