\
யாருக்கு ஆதரவு? நாளை அறிவிக்கிறார் தோப்பு வெங்கடாசலம்

யாருக்கு ஆதரவு? நாளை அறிவிக்கிறார் தோப்பு வெங்கடாசலம்

யாருக்கு ஆதரவு? நாளை அறிவிக்கிறார் தோப்பு வெங்கடாசலம்
Published on: 

அதிமுக அணிகளில் யாருக்கு ஆதரவு என்பதை நாளை அறிவிப்பதாக, எம்‌எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.

புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், அதிமுகவின் அணிகள் இணைப்புக்கு வரவேற்பு தெரிவிப்பதாக கூறினார். தன்னால் ஆட்சிக்கும் எந்த சிக்கலும் வராது என்றும் தோப்பு வெங்கடாசலம் கூறினார். தினகரன் அணியில் இருந்த தோப்பு வெங்கடாசலம், அணிகள் இணைப்புக்கு பிறகு வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அவர் தினகரன் அணியில் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், நாளை தனது முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்திருக்கிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com