தேர்தல் நேரங்களில் லஞ்சம் பெறுவதை பதிவு செய்ய புதிய ஆப் - நெல்லை கலெக்டர் அதிரடி

தேர்தல் நேரங்களில் லஞ்சம் பெறுவதை பதிவு செய்ய புதிய ஆப் - நெல்லை கலெக்டர் அதிரடி
தேர்தல் நேரங்களில் லஞ்சம் பெறுவதை பதிவு செய்ய புதிய ஆப் - நெல்லை கலெக்டர் அதிரடி

தேர்தல் கண்காணிப்புப் பணியில் பொதுமக்களும் ஈடுபடும் வகையில் "சி - விஜில்" எனும் தேர்தல் செயலியை நெல்லை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான விஷ்ணு தொடங்கி வைத்தார்.

சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்ய வேண்டும், கையூட்டு பெறாமல் மக்கள் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்பதை மாணவ மாணவிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான விஷ்ணு தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தலைமையேற்று பேசிய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறும் போது, “மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையான வாக்களிப்பதை நிறைவேற்ற வேண்டும். வாக்களிப்பதற்காக யாரும் எந்த அரசியல் நபர்களிடமிருந்தும் கையூட்டு பெறக்கூடாது. இதனை தடுப்பதற்காகவும் தேர்தல் நடைபெறும் முறைகேடுகளை ஆணையத்தின் பார்வைக்கு கொண்டு வருவதற்காகவும், உங்களுக்காக "சி - விஜில்" எனும் தேர்தல் செயலியை பிரத்யேகமாக உருவாக்கியுள்ளோம்.

இந்த செயலி மூலம் தேர்தல் நேரங்களில் யாரேனும் கையூட்டு பெற்றால் அதனை இந்தச் செயலி வாயிலாக தெரியப்படுத்தலாம். வீடியோ மற்றும் ஆடியோவாக நீங்கள் செய்யும் அந்தப் பதிவுகள் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த தேர்தல் கண்காணிப்பு பணியில் "சி - விஜில்" செயலி மூலம் இணைந்து பணியாற்றலாம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com