டிரெண்டிங்
ஓபிஎஸ்க்கு 10 ஓட்டு கூட கிடைக்காது: நாஞ்சில் சம்பத் விமர்சனம்
ஓபிஎஸ்க்கு 10 ஓட்டு கூட கிடைக்காது: நாஞ்சில் சம்பத் விமர்சனம்
தமிழக அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்டு தங்களது சொந்த தொகுதியில் போட்டியிட்டால், 10 ஓட்டுக்கூட வாங்க முடியாது என நாஞ்சில் சம்பத் விமர்சனம் செய்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அதிமுக கட்சி தொடங்கி 46ம் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் அதிமுகவை சேர்ந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுனரை சந்தித்து அரசின் மீது நம்பிக்கை இல்லை என்று சொன்னபோதே இந்த ஆட்சிக்கு உயிர் போய்விட்டது என்று கூறியுள்ளார். தமிழக அமைச்சர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இப்போது ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊரில் தேர்தலில் போட்டியிட்டாலும் 10 வாக்குகள் கூட வாங்க முடியாது என்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் 40 ஓட்டு வாங்க முடியாது என்றும், ஓ.பன்னீர் செல்வத்தால் 10 ஓட்டுகூட வாங்க முடியாது என்று விமர்சனம் செய்துள்ளார்.