மடியில் கணமில்லாதவர்கள் அஞ்ச வேண்டியதில்லை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து
மடியில் கணமில்லாதவர்கள் வருமான வரித்துறை சோதனையை பார்த்து அச்சப்பட வேண்டியதில்லை என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “பொதுவாக எங்கு பார்த்தாலும் ரெய்டு நடக்கிறது. அதற்கு காரணமாக கருப்பு பண ஒழிப்பு என்று சொல்கிறார்கள். அதனால், மடியில் கணமில்லாதவர்கள், அஞ்ச வேண்டியதில்லை” என்று தெரிவித்தார். பிரதமர் மோடி கருணாநிதியை சந்தித்ததற்கும், இன்றைய சோதனைக்கு சம்மந்தமில்லை என்றும் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னம் வழக்கிற்கும், இன்று நடைபெற்று வரும் சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்.பி வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். வருமான வரி செலுத்தாத அனைவரது வீட்டிலும் சோதனை நடத்தும் அதிகாரம் வருமான வரித்துறைக்கு இருப்பதாகவும், இது போன்ற சோதனைகள் புதிது அல்ல எனவும் இதுபோல் நிறைய சோதனைகள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.