\
அதிமுகவை வீழ்த்த முடியாது:அமைச்சர் விஜயபாஸ்கர்

அதிமுகவை வீழ்த்த முடியாது:அமைச்சர் விஜயபாஸ்கர்

அதிமுகவை வீழ்த்த முடியாது:அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on: 

இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதால் இனி அசைக்க முடியாத இயக்கமாக அதிமுக திகழும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், இனி எந்த தேர்தல்களிலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. இழந்த சின்னத்தை 2வது முறையாக மீட்டெடுத்தது அதிமுக மட்டும் தான் என பெருமிதத்துடன் கூறினார். இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதால் இனி அசைக்க முடியாத இயக்கமாக அதிமுக திகழும் என அவர் தெரிவித்தார்.முன்னதாக இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் சின்னம் வழங்கி உத்தரவிட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com