அதைச்சொல்ல மு.க.ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது: கடம்பூர் ராஜூ காட்டம்!

அதைச்சொல்ல மு.க.ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது: கடம்பூர் ராஜூ காட்டம்!
அதைச்சொல்ல மு.க.ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது: கடம்பூர் ராஜூ காட்டம்!

அதிமுக எம்பிக்களை ராஜினாமா செய்ய சொல்ல மு.க.ஸ்டாலினுக்கு உரிமையோ, தகுதியோ கிடையாது என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சியினரை பிரதமர் சந்திக்க மறுத்தால், அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என அழுத்தம் கொடுக்குமாறு சென்னையில் நடந்த ஆலோசனையின் போது முதலமைச்சரிடம் மு.க.ஸ்டாலின் கூயிருந்தார். இதற்கு பதிலளித்து, கோவில்பட்டியில் அம்மா இருசக்கர வாகனத்தினை தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, “அனைத்து கட்சி பிரதிநிதிகளை பிரதமர் சந்திக்க மறுத்ததாக கூறுவது தவறான தகவல். அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்த பின்பு பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காக 1998ல் மத்திய அமைச்சரவை பதவியில் இருந்து அதிமுக விலகியது. அது தான் அதிமுகவின் நிலைப்பாடு” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “எம்பிக்கள் ராஜினமா என ஸ்டாலின் கூறியுள்ளார். 14 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவில் இருந்த திமுக, வருமானம் வரக்கூடிய துறைகளை தான் பெற்றது. ஏன்? நீர்வளத்துறையை பெற்று காவிரி பிரச்சினையை தீர்த்து இருக்கலாமே. ஆனால் அது பற்றி கருத்தை கூட தெரிவிக்கவில்லை. எனவே திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இது பற்றி கூற உரிமையும், தகுதியும் கிடையாது” எனக் குறை கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com