டிரெண்டிங்
கொரோனா சிகிச்சை... அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
கொரோனா சிகிச்சை... அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனை தரப்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிக்கையில், அமைச்சரின் 90 சதவீதம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், ‘முக்கிய உறுப்புகளை சீராக இயங்க வைக்கும் பணி சவாலானதாக உள்ளது. சிகிச்சைக்கு துரைக்கண்ணுவின் உடல் எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதை 24 மணி நேரத்தில் கணிக்க முடியும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.