ஆண்களை பின்னுக்கு தள்ளிய பெண் வாக்காளர்கள் - நாடாளுமன்ற கள நிலவரம்
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றைய முன்தினம் நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில் தமிழ்நாட்டில் 71.90% வாக்குகள் பதிவாகின. இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு அளவில் ஆண்களைவிட பெண்களே அதிகம் வாக்களித்துள்ளனர். அதாவது 2,07,27,179 ஆண்களும் 2,12,96,722 பெண்களும் வாக்களித்தனர்.
இந்நிலையில் பெண்களைவிட ஆண்கள் சில தொகுதிகளில் அதிகளவில் வாக்களித்துள்ளனர். அந்தத் தொகுதிகள் எவை?
நாடாளுமன்றத் தொகுதிகள் வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள்
திருவள்ளூர் 6,99,869 6,95,221
வடசென்னை 4,74,635 4,69,507
தென்சென்னை 5,65,691 5,45,973
மத்திய சென்னை 3,99,484 3,83,056
ஸ்ரீபெரும்பதூர் 7,08,203 6,80,209
காஞ்சிபுரம் 6,13,215 6,00,820
கிருஷ்ணகிரி 5,85,933 5,67,767
தருமபுரி 6,07,597 5,86,807
சேலம் 6,38,283 6,08,152
திருப்பூர் 5,66,400 5,49,365
கோவை 6,41,620 6,11,769
இந்தத் தரவுகளை வைத்து பார்க்கும்போது குறைவான வாக்குகள் பதிவாகியுள்ள சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் பெண்களைவிட ஆண்களே அதிகம் வாக்களித்துள்ளனர். அதேபோல தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் பதிவான தருமபுரியிலும் (80.49) பெண்களைவிட ஆண்களே அதிகம் வாக்களித்துள்ளனர். அத்துடன் குறைந்த அளவில் வாக்குப்பதிவான தொகுதிகளில் அதிகம் ஆண்களே வாக்களித்துள்ள தகவலும் இந்தத் தரவுகள் மூலம் தெரிகிறது. ஆக, அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தொகுதிகளை தவிர, தமிழகம் முழுவதும் மீதமுள்ள 27 தொகுதிகளில் பெண்களே அதிகம் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.