'தாய்' 'தமிழ்' மொழியில் பேசிய பாகனும், பயிற்சியாளரும்: வீடியோ பகிர்ந்த தமிழக IAS சுப்ரியா!

'தாய்' 'தமிழ்' மொழியில் பேசிய பாகனும், பயிற்சியாளரும்: வீடியோ பகிர்ந்த தமிழக IAS சுப்ரியா!
'தாய்' 'தமிழ்' மொழியில் பேசிய பாகனும், பயிற்சியாளரும்: வீடியோ பகிர்ந்த தமிழக IAS சுப்ரியா!

யானைகள் பாதுகாப்பு மையத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 பாகன்கள் பயிற்சி பெறுவதற்காக தாய்லாந்திற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு தாய்லாந்து பயிற்சியாளருக்கு தமிழ்நாட்டு பாகன் தமிழ் கற்று கொடுத்தும், பதிலுக்கு அவர் தனது `தாய்’ (Thai) மொழியை கற்று கொடுக்கவும் செய்திருக்கிறார்.

இது தொடர்பான வீடியோவை தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறைக்கான கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சிப்பொங்க பதிவிட்டு பகிர்ந்திருக்கிறார்.

அதில், யானைகள் பாதுகாப்பு மையத்தில் பயிற்சி எடுப்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து சென்றிருக்கும் பாகன்கள், தாய்லாந்து பயிற்சியாளரிடம் கலந்துரையாடியிருக்கிறார்கள்.

உணவு இடைவெளியின் போது தாய்லாந்து பயிற்சியாளர் சோம்சாட்டிற்கு, பொம்மன் என்ற பாகன் தமிழ் கற்றுத்தர, பதிலுக்கு பொம்மனுக்கு சோம்சாட் தாய் மொழியில் பேச வைத்திருக்கிறார். இருவரும் பரஸ்பரமாக மாறி மாறி இருதரப்பு மொழிகளிலும் பேசி அளவளாவி இருக்கியிருக்கிறார்கள் என சுப்ரியா பதிவிட்டிருக்கிறார்.

சுப்ரியா பகிர்ந்த வீடியோவில், சோம்சாட் பொம்மனை பார்த்து உட்கார்ந்து சாப்பிடு என சொல்வது அதையே பொம்மனும் தாய் மொழியில் பேசுவதுமாக பதிவாகியிருக்கிறது. இந்த வீடியோ பதிவு இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலானோரின் கவனத்துக்கு சென்றிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com