டிரெண்டிங்
தமிழக அரசுக்கு மக்கள் மீது அக்கறையில்லை - ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழக அரசுக்கு மக்கள் மீது அக்கறையில்லை - ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழகத்தில் மக்கள் மீது அக்கறையில்லாத ஆட்சி நடப்பதாக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சில்வர்புரத்தில் உள்ள மாடன்குளத்தை தூர்வாரும் பணிகள் திமுக சார்பில் நடைபெற்றது. இந்த தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட பின் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழக அரசு மக்கள் நலப் பிரச்னைகளில் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என்று குறை கூறினார். விளம்பரம் செய்வதில் மட்டுமே அரசு கவனம் செலுத்துவதாகக் கூறிய அவர், நதிநீர் இணைப்புக்கு திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.