
ஆளுநரின் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாதென மாவட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், ஆளுநரின் அறிக்கையால் ஆச்சரியமடைவதாகக் கூறியுள்ளார். மேலும்,ஆளுநர் பதவி என்பது நிஜமான தலைமை பதவி கிடையாது, அது அதிகாரமற்ற பதவி என்றும், மத்திய அரசின் மீது முதலமைச்சர் அச்சம்கொண்டு அமைதிகாக்கும் நிலையில், ஆளுநர் தனது வரம்பை மீறி செயல்படுகிறார் என்றும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநரின் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாதென மாவட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.