\
தேர்தல் நாளான ஏப்ரல் 6ஆம் தேதி பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

தேர்தல் நாளான ஏப்ரல் 6ஆம் தேதி பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

தேர்தல் நாளான ஏப்ரல் 6ஆம் தேதி பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
Published on

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 6ஆம் தேதி பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நாளான ஏப்ரல் 6ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே நேற்றைய தினம் தொழிலாளர் ஆணையம் தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவித்து தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com