வேட்பாளர்கள் குற்ற வழக்குகள் இருப்பதை தெரியப்படுத்த வேண்டும் - சத்தியபிரதா சாஹூ

வேட்பாளர்கள் குற்ற வழக்குகள் இருப்பதை தெரியப்படுத்த வேண்டும் - சத்தியபிரதா சாஹூ

வேட்பாளர்கள் குற்ற வழக்குகள் இருப்பதை தெரியப்படுத்த வேண்டும் - சத்தியபிரதா சாஹூ
Published on

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிகளை செய்துவருகின்றனர். ஒருபுறம் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்புமனு தாக்கல் ஆகியவற்றில் இறங்கியிருக்க மறுபுரம் தேர்தல் ஆணையம் தேர்தலுக்குகான ஆயத்த பணிகளை மேற்கொண்டுவருகிறது. அத்துடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல்கள் குறித்தும் தேர்தல் ஆணையம் கவனித்து வருகிறது.


இந்திலையில் தமிழ்நாட்டு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மக்கள் ஆப் மூலமாக  கூட தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து புகார் அளிக்கலாம். அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை வந்த 597 புகார்களில் 187 நடவடிக்கை எடுத்துள்ளோம். 200 ரத்து, 158 தேர்தல் அலுவலர் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.  தேர்தல் நடத்தை விதிகள் மூலம் அனுமதி இல்லாமல் விளம்பரம் செய்தது உட்பட 166 வழக்கு பதிவு செய்துள்ளோம். வங்கிகள் பணம் எடுத்து செல்லும்போது கடைபிடிக்க வேண்டிக விதிகள் அறிவுறுத்தியுள்ளோம். 

செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்கில் பரிவர்த்தனை நடந்தால் கண்காணிக்கப்படும். இது வங்கி அதிகாரிகள் மூலம் கண்காணித்து வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கும். 11அடையாள அட்டை வைத்து வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்குப்பதிவு செய்யலாம். திமுக நேற்று கொடுத்த புகார் மாவட்ட தேர்தல்  அதிகாரி விவரம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சூலூர் எம்.எல்.ஏ இறப்பு தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் முறையாக அறிவிப்பு விடுப்பார். பின்னர் அதனை டெல்லியிலுள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவோம். அவர்கள் தான் தேர்தல் அறிவிப்பு செய்வார்கள். இம்முறை படிவம் 26ல் வேட்பாளர்கள் குற்ற வழக்குகள் இருப்பதை தெரியப்படுத்த வேண்டும். அத்துடன் அவர்களின் மீது உள்ள வழக்கு குறித்து விளம்பரம் கொடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com