\
நாகையில் மீன்வளக் கல்லூரி: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

நாகையில் மீன்வளக் கல்லூரி: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

நாகையில் மீன்வளக் கல்லூரி: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
Published on

நாகை மாவட்டம் தலைஞாயிறுவில் 12 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி தலைமைசெயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். 

திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் 19 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கான கட்டடங்களை அவர் திறந்து வைத்தார். அதேபோல், நாகை மாவட்டம் முட்டத்தில் மீன்வள பொறியியல் கல்லூரியில் 13 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டடப்படவுள்ள வகுப்பறைகள் உள்ளிட்டவற்றிற்கு அடிக்கல் நாட்டினார். 

திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டவுள்ள வண்ணமீன் வானவில் விற்பனை கடைகள் ஆகியவற்றிற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com