\
ஸ்மார்ட்கார்டில் நடிகை படம் ஏன் வந்தது? அமைச்சர் விளக்கம்!

ஸ்மார்ட்கார்டில் நடிகை படம் ஏன் வந்தது? அமைச்சர் விளக்கம்!

ஸ்மார்ட்கார்டில் நடிகை படம் ஏன் வந்தது? அமைச்சர் விளக்கம்!
Published on

 ஸ்மார்ட்கார்டில் திரைப்பட நடிகை படம் ஏன் வந்தது என்ற கேள்விக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்களித்தார்.

தமிழகத்தில் பழைய ரேசன் கார்டுகளுக்கு பதிலாக,  ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஸ்மார்ட்கார்டுகளில் பல குழப்பங்கள் நிலவுவதாக பொதுமக்கள் புகார் எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே சில மாவட்டங்களில் வழங்கப்பட்ட  ஸ்மார்ட்கார்டுகளில் திரைப்பட நடிகைகள் படம் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்நிலையில்  சட்டப்பேரவைக் கூட்டத்தில், மேற்கண்ட பிரச்னை குறித்து குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் இன்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் காமராஜ், பொதுமக்கள் தங்கள் மொபைல் ஃபோனில் ‘உணவு பொருள் வழங்கல் ஆப்’-ல் தவறான புகைப்படத்தை டவுன்லோடு செய்து பதிவேற்றியதே குளறுபடிகளுக்கு காரணம் என பதிலளித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com