ப்ளூடிக்.. ப்ளூடூத் குழப்பிய அமைச்சர்: விமர்சித்த எதிர்க்கட்சிகள்!

ப்ளூடிக்.. ப்ளூடூத் குழப்பிய அமைச்சர்: விமர்சித்த எதிர்க்கட்சிகள்!
ப்ளூடிக்.. ப்ளூடூத் குழப்பிய அமைச்சர்: விமர்சித்த எதிர்க்கட்சிகள்!

ப்ளூடிக் குறித்த கேள்விக்கு ப்ளூடுத் குறித்து அமைச்சர் பதிலளித்தால் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் பேசிய அதிமுக எம்எல்ஏ செம்மலை, ப்ளூவேல் விளையாட்டை தடைசெய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த தகவல்தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன், ப்ளுவேல் விளையாட்டு ரஷ்யாவில் இருந்து இயக்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு அந்த ப்ளூ வேல் சர்வரை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே அது குறித்து இனி அச்சப்பட தேவையில்லை என்றார். 

இதேபோன்று ட்விட்டரின் ப்ளூடிக் குறித்த செம்மலையின் கேள்விக்கு, மணிகண்டன் ப்ளூடுத் குறித்து பதிலளித்தார். இதனால் ப்ளூடூத்துக்கும், ப்ளூடிக்கும் அமைச்சருக்கு வித்தியாசம் தெரியவில்லையா? என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விஜயதரணி, அன்பில் மகேஷ் ஆகியோர் கேட்டதால் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com