நாங்களும் புள்ளி விவரத்தோட பேசுவோம்.. பன்னீர்செல்வம் பதில்!

நாங்களும் புள்ளி விவரத்தோட பேசுவோம்.. பன்னீர்செல்வம் பதில்!
நாங்களும் புள்ளி விவரத்தோட பேசுவோம்.. பன்னீர்செல்வம் பதில்!

சட்டப்பேரவையில், தேவைப்பட்டால் நாங்களும் புள்ளி விவரத்துடன் பேசுவோம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையின் இன்றை கூட்டத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக ஆட்சியில் சராசரியாக 38.5 நாட்கள் தான் சட்டப்பேரவை கூடியுள்ளது, ஆனால் திமுக ஆட்சியில் சராசரியாக 44 நாட்கள் கூடியுள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபை நிகழ்ச்சி 10 மணி முதல் 2 மணி வரை தான் நடைபெறும். ஆனால் அதிமுக ஆட்சியில் 3 மணி நேரம் மேலாக அவையை நடத்தி வருகிறோம். இதையெல்லாம் கூட்டி பார்த்தால் திமுக ஆட்சியை விட நாங்கள் தான் அதிக நேரம் பேரவை நடத்தி வருகிறோம் என்றார். 

இதைத்தொடர்ந்து பேசிய பழனிவேல் தியாகராஜன், 1996-2001 காலக்கட்டத்தில் திமுக 210 மணி நேரம் பேரவையை கூடியுள்ளது. ஆனால் 2001-06 அதிமுக ஆட்சியில் 148 மணி நேரம் தான் நடைபெற்றது என்றார். அத்துடன் பேரவை நடத்தும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம், கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் நாங்கள் பதிலளித்து வருகிறோம். புள்ளி விவரங்களுடன் பேசும் அவசியம் ஏற்பட்டால் நாங்களும் புள்ளி விவரங்களுடன் பேசுவோம் என்றார்.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com