"அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது"-ஜி.கே.வாசன்

"அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது"-ஜி.கே.வாசன்

"அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது"-ஜி.கே.வாசன்
Published on

அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில், இன்று கட்சியினருடன் அவசர ஆலோசனை நடத்திய பிறகு, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தொகுதிப் பங்கீடு நிலைப்பாடு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 12 தொகுதிகள் ஒதுக்குவதற்காக கோரிக்கை வைத்து வந்த நிலையில், அதிமுகவினர் 6 இடங்கள் ஒதுக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக 3 கட்டங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றும் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை.

இதற்கிடையே, 171 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ள நிலையில், த.மா.கா. எதிர்பார்த்த தொகுதிகளில் அதிமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுவது தெரிய வந்துள்ளது. இதனால் அக்கட்சியினர் இன்று அவசரக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனையில் ஈடுபட்டனர்.

கூட்டத்திற்கு பின், தொகுதிப்பங்கீடு, சட்டசபை தேர்தல் நிலைப்பாடு குறித்து கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறும்போது "அதிமுகவுடன் கூட்டணி தொடரும். அதிக இடங்களை ஒதுக்கக்கோரி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com