ஜெயலலிதாவின் சர்க்கரை அளவை கண்காணிக்காதது ஏன்?: டிகேஎஸ் இளங்கோவன்

ஜெயலலிதாவின் சர்க்கரை அளவை கண்காணிக்காதது ஏன்?: டிகேஎஸ் இளங்கோவன்

ஜெயலலிதாவின் சர்க்கரை அளவை கண்காணிக்காதது ஏன்?: டிகேஎஸ் இளங்கோவன்
Published on

ஜெயலலிதா வீட்டிலேயே சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளும் வசதி இருக்கும்போது, அவரின் சர்க்கரை அளவை முறையாக கண்காணிக்காதது ஏன் என திமுகவின் செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரின் உடல்நிலை என்ன நிலையில் இருந்தது என்பது குறித்த மருத்துவ அறிக்கை புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளது. அதில், நுரையீரல் தொற்று காரணமாக அவர் உடலில் 100% இருக்கவேண்டிய ஆக்ஸிஜன் அளவு 45% என்ற அபாய நிலையிலேயே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரி மனிதனுக்கு 120 எம்ஜி அளவு இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவானது ஜெயலலிதாவுக்கு 508 எம்ஜி என்ற அபாய நிலையில் இருந்தது எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து டிகேஎஸ் இளங்கோவன் கூறும்போது, “முதலமைச்சரின் பயணங்களில் ஆம்புலன்ஸ் செல்லும்போது வீட்டில் ஆம்புலன்ஸ் தயாராக இல்லாதது ஏன்? ஜெயலலிதா வீட்டிலேயே சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளும் வசதி இருக்கின்றபோது, அவரின் சர்க்கரை அளவை கண்காணிக்காதது ஏன்? சர்க்கரை அளவை முறையாக கண்காணித்திருந்தால் இந்த அளவுக்கு உடல் பாதித்திருக்காது. 2016, செப்டம்பர் 22-க்கு முன்பு ஜெயலலிதாவுக்கு சர்க்கரை பரிசோதனை எப்போது செய்யப்பட்டது? 2,3 நாட்களாக உடல்நலம் பாதித்திருந்த ஜெயலலிதாவை கவனிக்காதது ஏன்? ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா உடல்நிலை பற்றி அதிமுகவின் முன்னணி தலைவர்கள் முரண்பாடான கருத்து கூறினர். அதனால்தான் திமுக சிபிஐ விசாரணை கோரியுள்ளது” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com