திருத்தணி - வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் தேர்தலை தள்ளிவைக்க முடியாது: உயர் நீதிமன்றம்

திருத்தணி - வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் தேர்தலை தள்ளிவைக்க முடியாது: உயர் நீதிமன்றம்
திருத்தணி - வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் தேர்தலை தள்ளிவைக்க முடியாது: உயர் நீதிமன்றம்

வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் திருத்தணி தொகுதி தேர்தலை தள்ளிவைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

திருத்தணி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்த  என். அருண் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சி.எம்.டி.ஏ.-வில் பணியாற்றி, எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவராக இருந்து ஓய்வுபெற்றபின்னர், சமூக ஆர்வலராக பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

திருத்தணி தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கலின் இறுதி நாளன்று நெடுநேரம் காத்திருக்க செய்த பின்னரே தேர்தல் அலுவலர் மனுவை பெற்றதாகவும், தன்னை முன்மொழிந்த 10 பேரை தேர்தல் அலுவலரின் ஆட்களே மிரட்டி முன்மொழிவை திரும்ப பெறும்படி மிரட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பு மனு பரீலிக்கப்பட்ட பிறகு முன்மொழிந்தவர்களின் கையெழுத்து சரியாக இல்லை என தன் மனு நிராகரிக்கப்பட்டதாகவும், யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம் என அலட்சியம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே தன் வேட்புமனுவை புதிதாக 10 முன்மொழிபவர்கள் கையெழுத்துடன் புதிய வேட்புமனுவை பெற்று அதில் உரிய முடிவெடுக்கவும், அதுவரை திருத்தணி தொகுதி தேர்தலை தள்ளிவைக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் எஸ்.ராஜ்குமார், தேர்தல் ஆணையம் தரப்பில் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆகியோர் ஆஜரானார்கள். வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தேர்தல் வழக்காக மட்டுமே தொடர முடியுமென தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து அருண் வழக்கை நீதிபதிகள்  முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com