திருப்பூர்: பறக்கும் படையின் வாகன சோதனையில் சிக்கிய 2 சாமி சிலைகள் பறிமுதல்

திருப்பூர்: பறக்கும் படையின் வாகன சோதனையில் சிக்கிய 2 சாமி சிலைகள் பறிமுதல்

திருப்பூர்: பறக்கும் படையின் வாகன சோதனையில் சிக்கிய 2 சாமி சிலைகள் பறிமுதல்
Published on

திருப்பூரில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் 60 கிலோ எடையுள்ள வெண்கல சாமி சிலைகள் உரிய உரிமம் இல்லாமல் கொண்டு வரப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் -ஊத்துக்குளி சாலையில் உள்ள குளத்துபாளையம் பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது அவ்வழியே வந்த வாகனத்தில் உரிய உரிமம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 60 கிலோ எடையுள்ள இரண்டு வெண்கல சாமி சிலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இவைகளை கொண்டு செல்ல உரிய உரிமம் இல்லாத காரணத்தால் தேர்தல் பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்து திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இந்த சிலைகளை திருப்பூரில் இருந்து பெங்களூருக்கு கொண்டு சென்றதாக வாகனத்தை ஓட்டி வந்த முகமது ரசூல் தெரிவித்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் கார் ஆகியவை திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. காவல்துறையினர் உரிமம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட சிலைகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com