திருப்பூர் அரசு மருத்துவமனையில்  மின்தடை ஏன்? - ஆட்சியர் விளக்கம்

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்தடை ஏன்? - ஆட்சியர் விளக்கம்

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்தடை ஏன்? - ஆட்சியர் விளக்கம்
Published on

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டதால் ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டு 2 நோயாளிகள் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. அதன் காரணமாக நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் தடைபட்டதில் இரண்டு பேர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


இதுதொடர்பாக மருத்துவமனை முதல்வரிடம் விளக்கம் கேட்டபோது, இருவரும் உடல்நல பாதிப்பு காரணமாகவே உயிரிழந்ததாக விளக்கமளித்தார்.  அதன்பிறகு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், அரசு தலைமை மருத்துவமனையை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


மருத்துவக் கல்லூரி கட்டுமான பணியின் போது மின்வயர் துண்டிக்கப்பட்டது. இதனால் 40 நிமிடம் அளவிற்கு மின்தடை ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் சிகிச்சையில் இருந்த 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மின்வயர் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கான்ட்ராக்டருக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 அதேபோல சிகிச்சைக்காக 20 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மீதம் உள்ள நபர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து மருத்துவமனை இயக்குனர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நபர்களை வேறு பகுதிக்கு மாற்றுவது குறித்து சுகாதாரத் துறையிடம் கேட்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com