\
திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன் பாஜகவில் இணைந்தார்!

திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன் பாஜகவில் இணைந்தார்!

திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன் பாஜகவில் இணைந்தார்!
Published on

திமுக திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் சரவணன் சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.

2019 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மருத்துவர் சரவணனுக்கு இம்முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு கொடுத்த நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பரங்குன்றம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தியில் இருந்த சரவணன் இப்போது பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் இன்று பாஜகவில் இணைந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com