திருச்செந்தூர் கோயில் விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள பிரகார மண்டபத்தின் ஒரு பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி பேச்சியம்மாள் என் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கந்தசாமி, செந்தில் ஆறுமுகம் என்கிற இரண்டு பேர் காயம் அடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவ்விபத்தில் உயிரிழந்த பேச்சியம்மாளின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் பேச்சியம்மாளின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார். இதுதவிர காயம் அடைந்த 2 பேருக்கும் தலா ரூபாய் 1 லட்சம் வழங்கவும், முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் ஏற்படாத வகையில் அனைத்து கோயில் கட்டடங்களையும் ஆய்வு செய்யவும் முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். இதனிடையே, சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திருச்செந்தூர் விரைந்துள்ளார்.