\
துளிர்க்கும் நம்பிக்கை: வறுமையின் பிடியில் சிக்கிய குடும்பங்களுக்கு உதவி

துளிர்க்கும் நம்பிக்கை: வறுமையின் பிடியில் சிக்கிய குடும்பங்களுக்கு உதவி

துளிர்க்கும் நம்பிக்கை: வறுமையின் பிடியில் சிக்கிய குடும்பங்களுக்கு உதவி
Published on

'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை' மூலம் கரூரில் 7 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைத்துள்ளன.

நெரூரைச் சேர்ந்த கர்ப்பிணி விஜயா, ஓட்டுநர் செந்தில், அரிக்காரன்பாளையத்தில் வசிக்கும் மாரிமுத்து உள்ளிட்ட 7 பேரின் குடும்பங்களை சார்ந்தவர்கள் ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பை இழந்து உணவுக்கு கூட சிரமப்படுவதாக துளிர்க்கும் நம்பிக்கை வாயிலாக உதவியை நாடினர்.

இதனையறிந்த தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் சென்று அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினர்.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com