துளிர்க்கும் நம்பிக்கை: 15 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கி உதவி
'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை' இயக்கம் மூலமாக உதவி கோரிய 15 குடும்பங்களுக்கு தேவையான அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
'துளிர்க்கும் நம்பிக்கை' இயக்கத்தை தொடர்புகொண்டவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி கோரி அழைப்பு விடுத்தனர், அதில் மாதவரம் மாத்தூர் அருகே இருதய அறுவை சிகிச்சை செய்த மேத்யூ என்பவர் மருந்து கேட்டு கோரிக்கை முன்வைத்தார். அவருக்கும் உதவும் விதத்தில் ஒரு மாதத்திற்கு தேவையான மருந்தும், மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது.
சென்னையில் மட்டும் சாலிகிராமம், பெரம்பூர், புளியந்தோப்பு, சைதாப்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 15 குடும்பங்களுக்கு தலா 20 கிலோ அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான 15 பொருட்கள் கொண்ட மளிகை பை ஆகியவை வழங்கப்பட்டன.
- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.