கட்சியில் இல்லாதவர்கள் ஸ்டாலினை விமர்சிக்கத் தகுதியில்லை: மா.சுப்ரமணியன்
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து கட்சியில் இல்லாதவர்கள் விமர்சிக்கத் தகுதியில்லை என சென்னை மாநகர முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமது தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெறவுள்ள சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணிகளுக்கான கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் மா.சுப்ரமணியன் பங்கேற்றார். அதன் பிறகு பேட்டி அளித்த மா.சுப்ரமணியன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்காமல் திமுகவுக்கு தலைநிமிர்வை ஸ்டாலின் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக தெரிவித்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து கட்சியில் இல்லாதவர்கள் விமர்சிக்கத் தகுதியில்லை என தெரிவித்தார். ஸ்டாலினின் தலைமை குறித்து அழகிரி விமர்சனம் செய்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.