“இந்த வெற்றி 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்” - தொண்டர்கள் மத்தியில் மோடி பேச்சு
உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா என ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்த ஐந்து மாநிலங்களில் பஞ்சாப் நீங்கலாக பாஜக ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் டெல்லியில் அமைந்துள்ள பாஜக தலைமையகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசினார் பிரதமர் மோடி.
“2019 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு 2017 சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் அதனை தீர்மானித்து விட்டதாக சில அரசியல் வல்லுனர்கள் சொல்லியிருந்தனர். அதே போல அவர்கள் 2024 பொதுத் தேர்தலிலும் இதையே சொல்வார்கள் என எண்ணுகிறேன். ஏனெனில் நிச்சயம் இந்த 4 மாநிலங்களில் கிடைத்துள்ள வெற்றி 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்” என அப்போது பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது பாஜக கூட்டணி 18 மாநிலங்களில் ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

