சமோசா விற்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.. வைரல் வீடியோவும் பின்னணியும்!

சமோசா விற்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.. வைரல் வீடியோவும் பின்னணியும்!
சமோசா விற்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.. வைரல் வீடியோவும் பின்னணியும்!

ஒரே உருவ அமைப்பில் உலகில் ஏழு பேர் இருப்பார்கள் என கதைகள் வாயிலாக கூறப்பட்டாலும் அவை எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னும் தெரியவரவில்லை. ஆனால் ஒருவரை போன்ற தோற்றத்தில் ஏறக்குறைய சில ஒற்றுமைகளை கொண்ட பலரது பற்றிய தகவல்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக காணக்கிடைக்கும்.

நடிகைகள் ஐஸ்வர்யா ராய், மாதுரி தீக்‌ஷித் மற்றும் நடிகர் ஷாருக்கான் போன்றோருடைய உருவ ஒற்றுமையுடன், முகத் தோற்றத்துடன் இருப்பவர்கள் பற்றியும் வெளியாகி உண்மையில் இவர்கள்தான் அந்த பிரபலங்களா என்றெல்லாம் குழம்ப வைக்கும் அளவுக்கு பதிவுகளும் பறந்தன.

அந்த வரிசையில் தற்போது டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலும் இணைந்திருக்கிறார். மத்திய பிரதேசத்தின் குவாலியரில் டுவீலரில் வைத்து சமோசா விற்கும் ஒருவர் அச்சு அசலாக கெஜ்ரிவாலின் தோற்றத்திலேயே இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by vishal sharma (@foodyvishal)

அந்த நபரின் சாட் கடைக்கு சென்ற Food Vlogger விஷால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ எடுத்து பகிர்ந்திருக்கிறார். அதில் “குவாலியரில் சமோசா விற்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்” என கிண்டலாக கேப்ஷனிட்டிருக்கிறார். அந்த சமோசா விற்பவரும் கெஜ்ரிவாலை போலவே தொப்பி, கண்ணாடி மற்றும் ஸ்வெட்டர் அணிந்திருக்கிறார்.

அப்போது விஷால் அவரிடம் பேசிய போது, “குடிமக்களுக்காக கெஜ்ரிவால் நிறைய இலவசங்களை அறிவித்திருக்கிறார். குவாலியரின் கெஜ்ரிவாலாக இருக்கும் நான் தரமான சாட் வகைகளை விற்கிறேன்.” என்றிருக்கிறார்.

மோட்டார் சைக்கிளில் வைத்து சாமோசா, கச்சோரி உள்ளிட்ட சாட்களை விற்கும் இந்த குவாலியர் கெஜ்ரிவாலின் கடையில் அதிகபட்ச விலையே 30 ரூபாயகத்தான் நிர்ணயித்திருக்கிறார் என்பது வீடியோவில் அவர் விவரிப்பது மூலமே தெரிந்துக்கொள்ளலாம். இந்த வீடியோவை 10 லட்சத்துக்கும் மேலானோர் கண்டு ரசித்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com