”அவர் சந்தோஷமா இருந்தா போதும்..” - வேறு பெண்ணுடன் பழக கணவனுக்கு அனுமதி கொடுத்த மனைவி!

”அவர் சந்தோஷமா இருந்தா போதும்..” - வேறு பெண்ணுடன் பழக கணவனுக்கு அனுமதி கொடுத்த மனைவி!

கணவனின் சந்தோஷத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என்று கூறியிருக்கிறார் 37 வயதான இந்த அமெரிக்க பெண். இது குறித்து நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இல்லற வாழ்க்கை என வந்துவிட்டால் ஒருவருக்கு ஒருவர் சுக துக்கங்களை விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே அந்த உறவு நீடித்து நிலைத்திருக்கும் என சொல்வதுண்டு. இதனை முழு வீச்சாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த மோனிகா என்ற பெண்.

தன்னுடைய கணவனின் சந்தோஷத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என்று கூறியிருக்கிறார் 37 வயதான இந்த அமெரிக்க பெண். இது குறித்து நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில், தன்னுடைய கணவன் ஜான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதையே முழுநேர சிந்தனையாக கொண்டிருக்கிறாராம் மோனிகா.

கணவனுடனான உறவை மேன்மேலும் பலப்படுத்த அவரை மற்ற பெண்களுடன் அளவளாவ விடுவேன் என்றும், அது உடல் ரீதியாக இருந்தாலும் சரி மன ரீதியாக இருந்தாலும் சரி என்றிருக்கிறார் அந்த மனைவி. ஒரு அர்ப்பணிக்கப்பட்ட மனைவியாக வழக்கமான இல்லத்தரசியாக கணவன் மற்றும் வீட்டை கவனித்துக் கொண்டிருக்கிறார்.

ஜானுக்காக சமைப்பது, வீட்டை பராமரிப்பது என இதனையே எந்நேரமும் செய்து வருவதால், அவருடன் வெளியே செல்ல முடியாமல் போவதால் மற்ற பெண்களுடன் செல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என மோனிகா கூறியிருக்கிறார். மேலும், தான் என்ன மாதிரியான உடையை அணிய வேண்டும் என்பதை ஜான்தான் கூறுவார் என்றும், அப்படி அவர் சொல்வது தனக்கு மிகவும் பிடித்திருப்பாகவும் தெரிவித்திருக்கிறார்.

“தான் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை கணவன் பணிப்பதை சில பெண்கள் விரும்ப மாட்டார்கள்தான். ஆனால் ஜான் அப்படியெல்லாம் சொல்வது எனக்கு பிடித்திருக்கிறது. அவர் சொல்வதை போல நானும் இருப்பது அவருக்கு மகிழ்ச்சியை தருவதால் அது எனக்கும் சந்தோஷமே.” என்று மோனிகா வெளிப்படுத்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com