திருத்துறைப்பூண்டி: அதிமுக - கம்யூனிஸ்ட் மோதல்; ஆறுதல் கூறிய வேட்பாளர்!

திருத்துறைப்பூண்டி: அதிமுக - கம்யூனிஸ்ட் மோதல்; ஆறுதல் கூறிய வேட்பாளர்!
திருத்துறைப்பூண்டி: அதிமுக - கம்யூனிஸ்ட் மோதல்; ஆறுதல் கூறிய வேட்பாளர்!

திருத்துறைப்பூண்டி அருகே முன்விரோதம் காரணமாக அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மீது கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பரபரப்பு. திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ராயநல்லூர் நடுத்தெரு பகுதியில் உள்ள மன்மதன் கோவிலில் காமுண்டி திருவிழா நடைபெற்றது. அப்போது அதே பகுதியில் வசிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சரவணன், ராஜராஜன், தர்மராஜ் ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து, அங்கு இருந்தவர்களை அவதூறாக பேசியுள்ளனர்.

அதனால் இரு தரப்பினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, திடீரென அதிமுகவை சேர்ந்த 6 பேர் மீது கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மோதலுக்கு காரணம் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு அப்பகுதிச் சேர்ந்த 60 குடும்பத்தினர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்த தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com