திருநாவுக்கரசர் பாஜகவுக்கு செல்லலாம் ! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

திருநாவுக்கரசர் பாஜகவுக்கு செல்லலாம் ! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

திருநாவுக்கரசர் பாஜகவுக்கு செல்லலாம் ! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
Published on

திருநாவுக்கரசர் மீண்டும் பாரதிய ஜனதா கட்சிக்குச் சென்றால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "திருநாவுக்கரசர் பாஜகவில் இருந்து விலகி தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருப்பதைவிட மீண்டும் வாஜ்பாய் இருந்த பாஜகவுக்கு சென்றால் அவருக்கு அங்கு நல்ல எதிர்காலம் உண்டு என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "இப்போதும் கூட அதிக காலத் தாமதம் ஆகிவிடவில்லை. அவர்  மீண்டும் பாரதிய ஜனதா கட்சிக்குச் சென்றால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல எதிர்காலம் உண்டு" என்றார். இளங்கோவனின் இந்தக் கருத்து காங்கிரஸ் கட்சியினரிடம் சலசலப்பை உண்டாகியுள்ளது. 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com