\
ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் பிரச்சனை எதுவும் இல்லை: திருநாவுக்கரசர்

ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் பிரச்சனை எதுவும் இல்லை: திருநாவுக்கரசர்

ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் பிரச்சனை எதுவும் இல்லை: திருநாவுக்கரசர்
Published on: 

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், தமக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை என காங்கிரஸ் மாநிலத்தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்யமூர்த்திபவனில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் பிரச்சனை உள்ளதா? இருவருக்குமிடையே சமரசமாகி விட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர் “தீபாவளியை முன்னிட்டு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை ஈவிகேஎஸ் இளங்கோவனும், நானும் தனித்தனியாக சென்று சந்தித்தோம். வரும் போது ஒன்றாகத்தான் பேசிக்கொண்டு வந்தாம், ஒன்றாகத்தான் சாப்பிட்டோம். எங்கள் இருவருக்கும் இடையில் எந்தப் பிரச்சனையும் இல்லை, பிரச்சனை இருந்தால் தானே சமரசம் செய்ய முடியும்.”  என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com