யோகி ஆதித்யநாத்துக்கு 16 அடி நீள சோப்பு.... திருமா தகவல்

யோகி ஆதித்யநாத்துக்கு 16 அடி நீள சோப்பு.... திருமா தகவல்

யோகி ஆதித்யநாத்துக்கு 16 அடி நீள சோப்பு.... திருமா தகவல்
Published on

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு 16 அடி நீள சோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரபிரேச மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கிற ஆதித்தியநாத்தின் வருகையொட்டி தலித் மக்கள் குளித்துவிட்டு வரவேண்டும் என்று சொல்லி உத்தரபிரதேச அரசாங்கத்தின் சார்பில் சோப்பும், ஷாம்புவும் வழங்கப்பட்டுள்ளது. இது தலித் மக்களை இழிவுப்படுத்தும் செயலாகும் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.  உத்தரபிரதேச முதலமைச்சர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆதித்தியநாத் முதலில் சாதி அழுக்கிலிருந்து தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் எனச்சொல்லி அவருக்கு 16 அடி நீளமுள்ள சோப்பு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
மேலும், மேற்கு உத்தரபிரதேசப் பகுதியில் இருக்கும் சகரன்பூர் என்ற இடத்தில் தலித்துகள் தாக்கப்பட்டு, வீடுகள் எரிக்கப்பட்டு, ஒருவர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். ஆதித்தியநாத்தின் ஆதரவுபெற்ற தாக்கூர் சாதிவெறியர்கள் அந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளனர். 
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு தலித்துகள் மீதான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு வருகிறது. உத்தரபிரதேசத்தில் அவர்கள் ஆட்சி அமைந்ததற்குப் பிறகு வகுப்புவாதிகள் இன்னும் வெறிகொண்டு அலைகின்றனர் என திருமாவளவன் அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com