டிரெண்டிங்
ஆளுநரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்
ஆளுநரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்
ஆளுநர் பன்வாரிலால் கோவையில் மேற்கொண்டுள்ள திடீர் ஆய்வு நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். அத்துடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் பணிகள் குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த நிகழ்வு தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தை பொறுத்த வரையில் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் இதுவரை தலையிட்டது இல்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார். அத்துடன் ஆளுநரின் இந்த திடீர் ஆய்வு நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.