பாஜகவின் தேர்தல் அறிக்கை ஜீரோ ! காங்கிரஸ் அறிக்கையே சூப்பர் ஹீரோ - ஸ்டாலின் விமர்சனம்
பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை ஜீரோ என்றும், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையே சூப்பர் ஹீரோ என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து நாகராஜகோவில் திடலில் ஸ்டாலின் பரப்புரை செய்தார். அப்போது, பேசிய அவர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எந்த நலத்திட்டங்களையும் மத்திய அமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் செய்யவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொடுத்த எந்த வாக்குறுதியையும் பொன்.ராதாகிருஷ்ணன் நிறைவேற்றவில்லை என்றும் அவர் விமர்சித்தார். பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து பேசிய ஸ்டாலின், பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை ஜீரோ என்றும், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையே சூப்பர் ஹீரோ என்றும் தெரிவித்தார்.
கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் மூலம் திமுக மக்களை ஏமாற்ற முயல்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நாமக்கல் மக்களவைத்தொகுதி அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து சேலம் மாவட்டம் சங்ககிரியில் முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார்.
ஆட்சியில் இல்லாத திமுக சட்டமன்றத்தேர்தலை போல் வாக்குறுதிகளை அள்ளிவீசுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக கூட்டணியிலுள்ள பாரதிய ஜனதாவால் மட்டுமே மத்தியில் நிலையான ஆட்சி வழங்க முடியும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.