\
ஸ்லீப்பர் செல்கள் என்று யாரும் கிடையாது - கடம்பூர் ராஜூ

ஸ்லீப்பர் செல்கள் என்று யாரும் கிடையாது - கடம்பூர் ராஜூ

ஸ்லீப்பர் செல்கள் என்று யாரும் கிடையாது - கடம்பூர் ராஜூ
Published on

டிடிவி தினகரன் கூறுவது போல அதிமுகவில் ஸ்லீப்ப‌ர் செல்கள் யாரும் கிடையாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணாபிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் தமிழக அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ பேசுகையில் பெரும்பான்மையை நிரூபிக்க சில ராஜதந்திரங்கள் தேவைப்படுகிறது என்றார். மேலும் எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும் என்று தெரிவித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிமுகவில் ஸ்லீப்பர் செல் யாரும் கிடையாது, தினகரனை நம்பி போனாவர்கள் பதவி இழந்தது தான் மிச்சம் என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மாக்கள் அதிமுகவை வழிநடத்துகிறது என்றார். 1989ம் ஆண்டு வரலாறு மீண்டும் திரும்புகிறது. விரைவில் இரட்டை இலைச்சின்னம் மீட்கப்படும், 2021 வரை இந்த ஆட்சி தொடரும், இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி, இந்த ஆட்சியை யாராலும் வீழ்த்த முடியாது, இதனை பாதுகாக்க தேவையான ராஜதந்திரங்களை செய்வோம். அரசியல் என்றால் ராஜதந்திரம் தான், பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான அரசியலை செய்வோம், இடைத்தேர்தல் பொது தேர்தல் எது வந்தாலும் அதிமுக வெற்றி பெறும், துரோகிகளுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆன்மா தண்டனை கொடுக்கும் என்றார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com