\
வருமானவரிச் சோதனையில் அரசியல் இல்லை : அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் பேட்டி

வருமானவரிச் சோதனையில் அரசியல் இல்லை : அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் பேட்டி

வருமானவரிச் சோதனையில் அரசியல் இல்லை : அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் பேட்டி
Published on: 

வரிஏய்ப்பு செய்ததாக யார் மீது சந்தேகம் இருந்தாலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்துவது வழக்கம் என்றும் அதில், அரசியல் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.  

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. கும்பகோணத்தைச் சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 500க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். இந்த மாரத்தானை அமைச்சர் துரைக்கண்ணு, எம்.பி.வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். 

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த எம்.பி. வைத்திலிங்கம், வரிஏய்ப்பு செய்பவர்கள், வருமான வரி கட்டாமல் ஏமாற்றுபவர்களின் வீடுகளில்தான் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொள்வார்கள் என்றும், இதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com