டிரெண்டிங்
ஐ.டி.சோதனைக்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்
ஐ.டி.சோதனைக்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்
தினகரன் வீடு மற்றும் சசிகலா உறவினர்கள் வீடு அலுவலகங்ளில் நடைபெறும் சோதனைகளுக்கும், தமிழக அரசுக்கும் தொடர்பு இல்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன், சசிகலாவின் உறவினர்கள், ஜெயா டிவி அலுவலகம், நமது எம்ஜிஆர் நாளிதழ் அலுவலகம் என 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நேற்று காலை தொடங்கி இன்று வரை சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கவுகாத்தியில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க சென்ற அமைச்சர் ஜெயக்குமார், விமான நிலையத்தில் கூறும்போது, தினகரன் வீடு மற்றும் சசிகலா உறவினர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனைகளுக்கும், தமிழக அரசுக்கும் எந்தவித தொடர்பு இல்லை என்று கூறினார். மேலும் வருமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.