அமித்ஷாவின் வருகை குறித்து ஹெச்.ராஜா கூறியுள்ள கருத்து மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் அஞ்சலி கூட்டத்தில் பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா கலந்து கொள்ள மாட்டார் என சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ள செய்தி அதிகாரப்பூர்வமானது அல்ல என அக்கட்சியின் மாநில ஊடகப் பிரிவு தலைவர் சுப்ரமணிய பிரசாத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வருவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் உறுதிப்படுத்தபடவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைத்தே போட்டியிடும். ஆனால் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சென்னையில் நடைபெறும் திமுக தலைவர் கருணாநிதியின் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவோ, தலைவர் அமித்ஷாவின் சென்னை வருகை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என்று கூறியுள்ளார். இவரது கருத்து மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.