ரெய்டுக்கும் தமிழக அரசுக்கும் தொடர்பு இல்லை: கடம்பூர் ராஜூ

ரெய்டுக்கும் தமிழக அரசுக்கும் தொடர்பு இல்லை: கடம்பூர் ராஜூ

ரெய்டுக்கும் தமிழக அரசுக்கும் தொடர்பு இல்லை: கடம்பூர் ராஜூ
Published on

தமிழகத்தில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனைக்கும், தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், யாரையும் பழிவாங்குவதற்காக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவில்லை எனவும், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உறவினர்கள் வீடுகளில் நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனைக்கும்  தமிழக அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கூறினார். மேலும், சேகர் ரெட்டி உள்ளிட்டவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருமானவரித்துறையினர் தான் விளக்க வேண்டும் என்றும் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.  


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com