\
தேனி: வாக்களிக்க வந்த திமுகவை சேர்ந்தவரை முன்னாள் ராணுவத்தினர் திட்டியதாக வாக்குவாதம்

தேனி: வாக்களிக்க வந்த திமுகவை சேர்ந்தவரை முன்னாள் ராணுவத்தினர் திட்டியதாக வாக்குவாதம்

தேனி: வாக்களிக்க வந்த திமுகவை சேர்ந்தவரை முன்னாள் ராணுவத்தினர் திட்டியதாக வாக்குவாதம்
Published on

வாக்களிக்க வந்த கட்சியினரை பணியில் இருந்த முன்னாள் ராணுவத்தினர் தகாத வார்த்தையால் திட்டியதாக வாக்குவாதம் ஏற்பட்டது.

தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிக்கு வாக்குப்பதிவு நடந்து கொண்டுள்ள நிலையில், வார்டு-20-க்கான வாக்குப்பதிவின் போது கொண்டு ராஜா உயர் நிலைப்பள்ளிக்கு திமுகவை சேர்ந்த நபர் உள்ளே வந்துள்ளார். அப்போது அங்கு காவலில் நின்றிருந்த முன்னாள் ராணுவ படை வீரர், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் அந்த இடத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து திமுகவை சேர்ந்த அந்த நபர் நடுரோட்டில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டார். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததோடு காவலில் நின்றிருந்த முன்னாள் ராணுவ வீரரை அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு உடனே மாற்றினார்கள் இதனால் வாக்களிக்க வந்தவர்களிடம் அச்சம் ஏற்பட்டு அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com