\
தேனி: வாக்காளர்களுக்காக கிலோ கணக்கில் ஆட்டுக்கறி... சுற்றி வளைத்த தேர்தல் பறக்கும்படை

தேனி: வாக்காளர்களுக்காக கிலோ கணக்கில் ஆட்டுக்கறி... சுற்றி வளைத்த தேர்தல் பறக்கும்படை

தேனி: வாக்காளர்களுக்காக கிலோ கணக்கில் ஆட்டுக்கறி... சுற்றி வளைத்த தேர்தல் பறக்கும்படை
Published on

வாக்காளர்களுக்கு பரிசு பொருளாக ஆட்டுக்கறி கொடுக்கப்போவதாக வந்த தகவலை அடுத்து தேர்தல் பறக்கும் படையினர் ஆட்டுக்கறியை பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்களாருக்கு ஆட்டுக்கறி வழங்கப்போவதாக வந்த தகவலையடுத்து பறக்கும் படை அதிகாரி பரதன் ஆட்டுக்கறியை பறிமுதல் செய்து பேரூராட்சி தேர்தல் அதிகாரி மல்லிகாவிடம் ஒப்படைத்தார்.

அதில் ஒருகிலோ எடை கொண்ட பேக்கிங்கில் சுமார் 30 கிலோ ஆட்டுக்கறி ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆட்டுக்கறி கொடுத்த சம்பவம் குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரனை செய்து வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com