\
”மண்டைல இருந்த கொண்டைய மறந்துட்டனே” - வெற்றிக்களிப்பில் ஆட்டம் போட்ட திருடன்!

”மண்டைல இருந்த கொண்டைய மறந்துட்டனே” - வெற்றிக்களிப்பில் ஆட்டம் போட்ட திருடன்!

”மண்டைல இருந்த கொண்டைய மறந்துட்டனே” - வெற்றிக்களிப்பில் ஆட்டம் போட்ட திருடன்!
Published on

வைரல் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லாத உலகம்தான் சமூக வலைதளங்கள். அந்த வகையில் திருடன் ஒருவன் தனது திருட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்ட சந்தோஷத்தில் உற்சாகமாக நடமாடும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரப்பட்டிருக்கிறது.

மத்திய பிரதேசத்தின் கடை ஒன்றில் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோ சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்திருக்கிறது. தனக்கு தேவையான பணம் மற்றும் பொருட்களை திருடிய பிறகு வாயில் குட்காவை போட்டு மென்றுக் கொண்டு ஆட்டம் போட்டிருக்கிறார் அந்த திருடன்.

திருடப்பட்ட கடையின் உரிமையாளர் மறுநாள் காலை வந்து பார்த்த போதுதான் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து போலீசிடம் தகவல் கொடுக்கப்பட்டதும் சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by Swatkat (@swatic12)

அங்கிருந்த சிசிடிவி கேமிராவை ஆராய்ந்த போதுதான் அந்த திருடனின் சேட்டைகள் தெரிய வந்திருக்கிறது. அதில் பணங்களை திருடியதும் ஹாயாக ஆட்டம் போட்டு குட்காவை மென்ற அந்த திருடன் சிசிடிவியை பார்த்ததும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

திருடனின் இந்த ஆட்ட வீடியோ swatic12 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டதோடு, “சின்ன சின்ன வெற்றியை கொண்டாடுங்கள்” என கேப்ஷனும் இடப்பட்டிருக்கிறது. அந்த திருடனின் ஆட்டத்தை கண்ட நெட்டிசன்கள் பலரும் “வெற்றிக்கான vibe இதுதான்” என்றெல்லாம் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com