கிணற்றில் விழுந்தவரை காப்பாற்றச் சென்று தண்ணீரில் தத்தளித்த இளைஞர்

கிணற்றில் விழுந்தவரை காப்பாற்றச் சென்று தண்ணீரில் தத்தளித்த இளைஞர்

கிணற்றில் விழுந்தவரை காப்பாற்றச் சென்று தண்ணீரில் தத்தளித்த இளைஞர்
Published on

தாம்பரம் அடுத்த படப்பையில் கிணற்றில் தவறி விழுந்து ஹோட்டல் உரிமையாளர் உயிரிழப்பு. அவரை காப்பாற்ற முயன்ற 16 வயது சிறுவனை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.


தாம்பரம் அடுத்த படப்பை, சாலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகன் குகன். இவர் பஜார் வீதியில் உணவகம் நடத்தி வந்தார். இந்நிலையில் படப்பை அண்ணாநகர் முதல் தெருவில் வசித்து வரும் அவரது அக்கா ஆதிலட்சுமி வீட்டிற்கு வந்த குகன் வீட்டின் பின்பக்கம் உள்ள கிணற்றுக்கு அருகாமையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது குகனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். 


இதனைக் கண்ட ஆதி லட்சுமியின் மகன் சதீஷ், குகன் கிணற்றுக்குள் விழுந்து கிடப்பதை கண்டு காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்துள்ளார். அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சதீஷின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்த பொதுமக்கள் சம்பவம் பற்றி காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 


இதனைத்தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிய சதீஷின் உடலில் கயிறு கட்டி துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. உயிரிழந்த குகனை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனையில் அனுமதித்து, விபத்து குறித்து மணிமங்களம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com