\
அண்ணனிடம் திருடி தம்பியிடம் விற்பனை... தாமாக சிக்கிய ஆடு திருடன்

அண்ணனிடம் திருடி தம்பியிடம் விற்பனை... தாமாக சிக்கிய ஆடு திருடன்

அண்ணனிடம் திருடி தம்பியிடம் விற்பனை... தாமாக சிக்கிய ஆடு திருடன்
Published on

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே ஆடுகளை திருடிய வாலிபர் உரிமையாளரின் தம்பியிடமே விற்க முயன்றபோது வசமாக சிக்கினார். 


மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழமாத்தூர் பகுதியை சேர்ந்த கருப்பணன் என்பவருக்கு சொந்தமான 6 ஆடுகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக திருடு போனது. ஆடுகள் காணாமல் போனதால் கருப்பணன் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.


இந்த நிலையில் ஆடுகளை திருடிய வாலிபர் ஆடு உரிமையாளாரின் தம்பியிடமே ஆடுகளை விற்பனை செய்ய முயன்றபோது வசமாக மாட்டிக் கொண்டார். உடனடியாக நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆடு திருடிய வாலிபரை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை செய்தபோது 6 ஆடுகளை திருடியதை ஒப்புக் கொண்டார்.


போலீசாரின் விசாரணையில் ஆடு திருட்டில் ஈடுபட்டது கீழமாத்தூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பதும் ஆடுகளை திருடியவுடன் அதனை சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்று கிடைக்கும் விலைக்கு விற்ற பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் தெரிய வந்தது.


தொடர்ந்து அவரிடமிருந்து 6 ஆடுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com