கடலூர்: இருசக்கர வாகனத்தில் பெண்ணின் புடவை சிக்கி உயிரிழந்த பரிதாபம்..!

கடலூர்: இருசக்கர வாகனத்தில் பெண்ணின் புடவை சிக்கி உயிரிழந்த பரிதாபம்..!

கடலூர்: இருசக்கர வாகனத்தில் பெண்ணின் புடவை சிக்கி உயிரிழந்த பரிதாபம்..!
Published on

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணின் புடவை, சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள மேல்ஆதனூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி என்பவரின் மனைவி சுகந்தி (40). இவர்கள் இருவரும் ஆயுத பூஜை வருவதால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக மேல் ஆதனூரில் இருந்து திட்டக்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். 


அப்போது பெரியசாமி வாகனத்தை ஓட்ட சுகந்தி பின்னால் அமர்ந்தபடி, பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பெருமுளை கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த சுகந்தியின் புடவை இருசக்கர வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுகந்திக்கு பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. 


உடனடியாக சுகந்தியை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com