\
கோவையில் கமல்ஹாசனுக்கு ஆதரவு திரட்டிய சுஹாசினி - தலையை தொட்டு ஆசி வழங்கிய மூதாட்டி

கோவையில் கமல்ஹாசனுக்கு ஆதரவு திரட்டிய சுஹாசினி - தலையை தொட்டு ஆசி வழங்கிய மூதாட்டி

கோவையில் கமல்ஹாசனுக்கு ஆதரவு திரட்டிய சுஹாசினி - தலையை தொட்டு ஆசி வழங்கிய மூதாட்டி
Published on

கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்காக வாக்கு சேகரித்த நடிகை சுஹாசினிக்கு பெண்கள் ஆசி வழங்கினர்.

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட சுக்கிரவார்பேட்டை, டி.கே.மார்க்கெட், சின்னஇலை தெரு, கிருஷ்ணப்பா குடியிருப்பு, பட்டுப்பூச்சி குடியிருப்பு, பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்ற சுஹாசினி, தனது சித்தப்பா கமல்ஹாசனுக்கு ஆதரவு திரட்டினார்.

கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை கையில் கொண்டு சென்று, சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரத்தைக் கேட்டறிந்த அவர் அங்கு இருந்தவர்களிடம் மக்கள் நீதிமைய கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறினார். அந்த சமயத்தில், நடிகை சுஹாசினியைப் பார்த்த ஒரு பெண்மணி அவரது தலையில் கைவைத்து ஆசிர்வதிக்க, சுஹாசினி நெகிழ்ந்து போனார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com